ரொரான்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு கொரோனா வைரஸ் நேர்மறைப் பயணிகளுடன் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 51 விமானங்கள் வந்ததாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கனடாவின் வழக்கமான அறிக்கையின்படி, விமானங்கள் கொரோனா வைரஸ் நேர்மறை பயணிகளுடன் நாட்டிலிருந்து தரையிறங்கும் அல்லது புறப்படும் மற்ற அனைத்து விமானங்களுடனும் உத்தியோகபூர்வமான அரசாங்க இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
51 விமானங்களில் 34 விமானங்கள் பல நாடுகளிலிருந்து வந்தன. 17 விமானங்கள் கனடாவின் பிற நகரங்களிலிருந்து வந்தன.
சர்வதேச விமானங்கள் பல கண்டங்களில் இருந்து வந்தன. குறிப்பாக கெய்ரோ, பிராங்பேர்ட், புவேர்ட்டோ வல்லார்டா மற்றும் சியாட்டிலிலிருந்து விமானங்கள் வந்துள்ளன.