வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல்களில், மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு, வெளியுறவு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் தேர்தல்களின் போது, பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அஞ்சல் வாக்குகளை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, ‘வெளிநாடுகளில் வேலை பார்க்கும், படிக்கும் மாணவர்கள், தங்கள் மாநிலத்தில் நடக்கும் தேர்தலில், மின்னணு முறை வசதியை பயன்படுத்தி, அஞ்சல் வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணைக்குழு, கடந்த நொவம்பர் மாதம், சட்டத்துறை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதை பரிசீலித்த வெளியுறவு அமைச்சு தேர்தல் ஆணைக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, இது தொடர்பாக, ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்படி, கடிதம் எழுதியுள்ளது.