சென்னையில் இன்று 8 மணி நேரத்தில் 15.5 சென்ரி மீற்றர் மழை கொட்டித் தீர்த்துள்ளதாக வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில், கடும் மழை பெய்து வருகிறது.
நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.
பிரதான சாலைகளில் அதிகளவு மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன சாரதிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அவற்றில் இருந்து நீர் திறந்து விடப்படுகிறது,
இன்று மாலை 4 மணியுடன் முடிந்த 8 மணி நேரத்தில் சென்னை கிண்டியில் 15.5 சென்ரி மீற்றர் மழை கொட்டி தீர்த்துள்ளது.
அதேவேளை, சென்னையில் சராசரியாக கடந்த 8 மணி நேரத்தில் 11.46 சென்ரி மீற்றர் மழை பதிவானதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.