சிறிலங்காவில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை வழங்க வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அத்தோடு ரூபாயின் பரிமாற்ற வீதம் சீராக இல்லாதமை காரணமாக கடனின் மதிப்பு அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதுள்ள கடன்களை திருப்பி செலுத்துவதற்கு அரசாங்கம் அதிக வெளிநாட்டுக் கடனை பெற்றுக்கொள்ளுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விற்பனை விலை 191 ரூபாவாக காணப்படுவதாக மத்திய வங்கியின் தரவு காட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.