அமெரிக்காவின் வன்முறைச்சம்பவங்கள் மற்றும் அதனுடன் தொடர்ச்தேச்சியாக நடைபெறுகின்ற விடயங்கள் அனைத்தையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்காவுக்கான கனடிய தூதுவர் கிர்ஸ்டன் ஹில்மேன் (Kirsten Hillman) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் உள்விவகாரங்களின் தலையீடுசெய்வதும் அதுபற்றிய பகிரங்க கருத்தாடலும் பொருத்தமற்ற செயற்பாடு என்று குறிப்பிட்டுள்ள அவர் ஜனநாயகத்தின் மீதான கரிசனை தமக்குள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் இப்பகுதியில் உள்ள தூதரகமும், தூதரக அதிகாரிகளும், உழியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.