அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் (Antonio Guterres) தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலைகளில் அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களை வன்முறைகளை கைவிடுமாறு வலியுறுத்துவது அவசியம் என தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுமாறும் சட்டத்தின் ஆட்சியை மதிக்குமாறும் அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களை கேட்டுக்கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.