தமிழகத்தில் பிரபலமான ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சகாயம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்தார்.
இதையடுத்து அவர் பல்வேறு அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுத்திருந்த போதும், நேர்மையான முறையில் செயற்பட்டு, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வந்த சகாயம், அரசு பதவியிலிருந்து ஓய்வுபெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு கடந்த ஒக்டோபர் தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தார்.
விருப்ப ஓய்வு கேட்டு 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சகாயம் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.