எட்டு சீன அலைபேசி செயலிகளை தடை செய்திருப்பது, அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என சீனா குற்றம்சாட்டி உள்ளது
சீனாவின் எட்டு அலைபேசி செயலிகளை தடைசெய்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
டிரம்பின் இந்த தடை உத்தரவு 45 நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, மிரட்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட செயலி நிறுவனங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களை நியாயமற்ற முறையில் அடக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.