அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு முகாமில் உள்ள இரண்டு கட்டிடங்களுக்கு தீமூட்டப்பட்டன என தடுப்பு முகாமில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்புமுகாமின் கட்டிடமொன்றின் உச்சியில் இருவர் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகாமில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோரினோம் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கலவரத்தில் ஈடுபடவேண்டிய நிலையேற்பட்டது என அகதியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோய் என்ற அகதி தனது சகாக்கள் 22 மணித்தியாலங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இணையத்தை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, உளவியல் மற்றும் உடல்நல ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறியுள்ளார்.