இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சரை கொழும்பில் சந்தித்தனர்.
இதன்போது, பெருந்தோட்டத்துறையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்திய வௌிவிவகார அமைச்சரை இன்று சந்தித்துள்ளனர்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம், மாகாண சபைகள் தொடர்பாக இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என இந்த சந்திப்பின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.