மட்டக்களப்பு- ஏறாவூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக, கரடியனாறு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை ஏறாவூர் பகுதியில் தொலைதொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, காணொளிப் பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் குகராசு சுபோஜனை, சிலர் அச்சுறுத்தி பதிவு செய்யவிடாமல் தடுத்ததுடன். அவரைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்துள்ளனர்.
குறித்த குழுவினரிடம் இருந்து தப்பிச் சென்ற ஊடகவியலாளர் நேற்று கரடியனாறு காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.