உத்தரப்பிரதேசம், மற்றும் உத்தர்காண்ட் மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
திருமணம் செய்வதற்காக, பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில் உத்தரப்பிரதேசத்திலும், உத்தரகாண்ட்டிலும், சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டநிபுணர் விஷால் தாக்ரே, தொண்டு நிறுவனம் ஒன்று மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்களை நாடும்படி தெரிவித்துள்ளது,
எனினும், இந்த சட்டம், சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது குறித்து விசாரணை நடத்தவும், உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.