அமெரிக்காவில் நடைபெறவிருந்த கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 31-ம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியை பிற்போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.