சிறிலங்கா இராணுவம் புதிதாக விவசாய மற்றும் கால்நடை படையணியை உருவாக்கியுள்ளது.
சிறி ஜயவர்த்தபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே இந்த புதிய படையணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
உள்நாட்டு விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் நிகழ்ச்சித் திட்டத்துக்கமையவே சிறிலங்கா இராணுவம் இந்த புதிய படையணியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.