டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளதை புதிய ஜனாதிபதியா தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கடுமையாக கண்டித்துள்ளார்
ஜனநாயகம் முன்னர் ஒருபோதும் எதிர்கொண்டிராத தாக்குதலை சந்தித்துள்ளது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டிரம்ப் தேசிய தொலைக்காட்சியில் உடனடியாக உரையாற்ற வேண்டும், தனது சத்தியப்பிரமாணத்தில் தெரிவித்ததை நிறைவேற்றவேண்டும், அரசமைப்பை காப்பாற்றவேண்டும், தனது ஆதரவாளர்களை முற்றுகையை கைவிடுமாறு கேட்டுக்கொள்ளவேண்டும் என பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைவதும் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்துவதும் அமெரிக்க செனட்டின் அலுவலகங்களிற்குள் நுழைவதும் மேசை நாற்காலிகளை சேதப்படுத்துவதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் அச்சுறுத்துவதும் ஆர்ப்பாட்டமில்லை, கிளர்ச்சி என பைடன் தெரிவித்துள்ளார்.