அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கப்பிட்டல் கட்டடம் மீது ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்று மத்திய விசாரணைப் பிரிவான, எவ்பிஐ (FBI) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
டொனால்ட் l;ரம்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறைகளை அடுத்து, வொஷிங்டனில் 15 நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலவரத்திற்கு மூளையாக செயற்படுவது யார், பொதுமக்களை போராட்டத்துக்கு தூண்டி விட்டது யார் என்று எவ்பிஐ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன், திடீரென்று ஆயிரக்கணக்கானோர் எவ்வாறு வொஷிங்டன் மாகாணத்தில் நுழைந்தனர் என்றும், இவர்களை ஒன்று திரட்டியது யார் என்றும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
டொனால்ட் டிரம்ப்பினால் திட்டமிடப்பட்ட நடவடிக்கையா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.