பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு, மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
மெய்நிகர் வழியாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது கொரோனா தடுப்பூசியை மாகாண ரீதியாக விநியோகிப்பதில் காணப்படும் சாவால்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் மாகாணத்தில் முன்னுரிமை பட்டியலின் பிரகாரம் தடுப்பூசியை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், மேலதிகமான தேவைகள் காணப்படுமாயின் அவற்றை தாமதமன்றி மத்திய அரசிடம் அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பரவல் விடயத்தில் மாகாணங்களின் தீவிரமான நடவடிக்கைகளையும். அதற்கு தலைiமை தாங்கும் முதல்வர்களையும் பிரதமர் ரூடோ பாராட்டி தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.