கனடாவிற்குள் விமானங்கள் மூலமாக பிரவேசிப்பவர்கள் தொடர்பில் சமஷ்டி அரசாங்கம் அறிவித்துள்ள புதிய ஒழுங்குமுறைகள் அமுலுக்கு வந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமஷ்டி அரசாங்கம் கொரோனா தடுப்பினை மையப்படுத்திய செயற்பாடுகளில் எவ்விதமான தளர்வு போக்கினையும் காட்டாது என்றும் சமஷ்டி அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த புதிய விதிகளின் பிரகாரம், கொரோனா பரிசோதனை அறிக்கையை விமான காண்பிக்க வேண்டும் என்பதோடு அது 72 மணி நேரத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.