மக்கள் நீதி மையம் கட்சி ஆட்சிக்கு வந்தால், வீட்டுக்கு ஒரு கணினி வழங்கப்படும் என அந்தக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்குறுதி அளித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தின்போது வாக்குறுதிகளையும் வெளியிட்டு வருகிறார்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை ஏற்கனவே அவர் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், காட்பாடியில் இன்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், , ‛ தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு கணினி வழங்கப்படும்,’ என்று தெரிவித்துள்ளார்.