அமெரிக்காவில் நாடாளுமன்ற கலகத்தை ஹொங்ஹொங்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிட்டுள்ள சீனா ஹொங்ஹொங்கில் எவரும் கொல்லப்படவில்லை என தெரிவித்துள்ளது.
ஹொங்ஹொங்கில் 2019 இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவில் இடம்பெற்றதை விட தீவிரமானவை என சீனாவின் வெளிவிவகா அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்கள் அமைதி, ஸ்திரதன்மை, பாதுகாப்பு போன்றவற்றை கூடிய விரைவில் அனுபவிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்