கனடாவுக்கு இந்த மாத இறுதியில், 1.2 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகள் வந்து சேரும் என்று, தடுப்பூசி விநியோகத் திட்டத்துக்கு பொறுப்பாக உள்ள இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் டானி போர்டின் (Dany Fortin) தெரிவித்துள்ளார்.
கனடாவில் மோடேனா மற்றும் பைசர் –பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இதற்கென கட்டம் கட்டமாகவே மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி இந்த வாரம், 4 இலட்சத்து 24 ஆயிரம் மோடேனா மற்றும் பைசர் – பயோஎன்டெக் (Pfizer – BioNTech) தடுப்பு மருந்துகள் வந்தடைந்துள்ளன.
இந்த மாத இறுதிக்குள் மேலும்,1.2 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றும் மேஜர் ஜெனரல் டானி போர்டின் (Dany Fortin) மேலும் தெரிவித்துள்ளார்.