ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு முக்கிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு தீவிரமாக உள்ள டோக்கியோ, சிபா, சைதாமா மற்றும் கனகவா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அவசர நிலை இன்று தொடங்கி அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும்படியும் கூடுமானவரை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.