கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதற்கு, நத்தார் விடுமுறை ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒன்ராரியோ முதல்வர் டக் போர்ட் (DUG FORD) தெரிவித்துள்ளார்.
நத்தாருக்கு முன்னர், குறைந்திருந்த தொற்று, நத்தாருக்குப் பின்னர், தீவிரமடைந்து வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நத்தாருக்கு மறுநாள் தொடக்கம் ஒன்ராறியோவில் மாநிலம் தழுவிய முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ள போதும், தொற்றாளர் எண்ணிக்கை தீவிரமடைந்து வருவது மாகாண அரசை நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஒன்ராறியோவின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் டேவிட் வில்லியம்ஸ் (David Williams) தெரிவித்துள்ளார். ஊடரங்கின் மூலம் இதனை தடுக்க முடியும் என்றும், அதுகுறித்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.