யாழ்.பல்கலைகழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன.
முகங்களை முழுமையாக மூடியபடி இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியெங்கும் நடமாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இப்பகுதியெங்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விசேட மேலும், அதிரப்படையினரும் பல்கலைக்கழக வளாகம் எங்கும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தமிழ் மக்களின் ஆன்மாவிலேயே சிறிலங்கா படைகள் கைவைத்து விட்டதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
யாழ்.கட்டளைத்தளதி, காவல்துறை அதிபர், என்று எந்தவொரு தரப்பும் தொடர்புக்கு வராதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார். நினைவேத்தூபியை இடித்தளிக்கும் செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.