அமெரிக்கா, பிரிட்டனின் கொரோனா வைரஸ் மருந்துகளுக்கு ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்தொல்லாஅலிகமேனி (Ayatollah Ali Khamenei) தடை விதித்துள்ளார்.
ஈரானின் தேசிய தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள ஆன்மீகத் தலைவரின் உரையில் இந்தத் தடை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்
உலகின் இரண்டு மேற்குலக நாடுகளிலும் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகயிருப்பதன் காரணமாக இந்த மருந்துகளில் தனக்கு நம்பிக்கையில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உண்மையிலேயே மருந்தொன்றினை உருவாக்கியிருக்கும் என்றால் அவர்களின் நாட்டில் இவ்வளவு இழப்புகள், குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.