இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஸ்ரீவிஜயா நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 பயணிகள் விமானம், 62 பயணிகளுடன், ஜகார்த்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, போர்னியோ தீவுக்கு புறப்பட்டுச் சென்ற நிலையிலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் ராடாரில் இருந்து மறைந்துள்ளது.
ஜகார்த்தா அருகே கடல் பகுதியில் விழுந்து, அந்த விமானம் விபத்திற்குள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலரின் உடல்களும், விமானத்தின் உதிரி பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.