உருமாறிய கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை, தமது தடுப்பூசி கட்டுப்படுத்துவதாக ஃபை சர் நிறுவன தலைமை விஞ்ஞானி வைத்தியர் பிலிப் டோர்மிட்சர் (Philip Dormitzer) தெரிவித்துள்ளார்.
தற்போது உலகநாடுகளை அச்சத்தில் ஆழ்த்திவரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் வேலை செய்யுமா? என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து வந்தது.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள ஃபை சர் தடுப்பூசி, இந்த உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பூசி போடப்பட்ட 20 பேரின் இரத்த மாதிரிகளைக்கொண்டு உருமாறிய வைரஸுக்கு எதிராக ஆய்வு நடத்தப்பட்டது.
அதேநேரம் இந்த ஆய்வு முடிவுகள் முதற்கட்டமாக கிடைத்த தகவல்கள் தான் எனவும், இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு தெரியவரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.