தமது மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் (Kim Jong-un) தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின், ஆளும் தொழிலாளர் கட்சியின், மாநாட்டில் உரையாற்றிய அவர், எங்கள் புரட்சிக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய எதிரியாக உள்ள அமெரிக்காவை வீழ்த்துவதில் குறியாக இருக்க வேண்டும் என்றும், கிம் ஜொங் உன் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்காவில் யார் ஆட்சியில் இருந்தாலும், வட கொரியா எதிர்ப்புக் கொள்கையின் உண்மையான தன்மையும் உண்மையான மனப்பான்மையும் ஒருபோதும் மாறாது.
ஒரு பொறுப்புள்ள அணுசக்தி நாடு என்ற வகையில், ஆக்கிரமிப்பு விரோத சக்திகள் அதை பயன்படுத்த முயற்சிக்காவிட்டால், வடகொரியா அணு ஆயுதங்களை துஷ்பிரயோகம் செய்யாது.
அமெரிக்காவைத் தடுக்க வட கொரியா ஆயுதங்களுடன் முன்னேறி வருகிறது.
வடகொரியாவுக்கு எதிரான தனது விரோதக் கொள்கையை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்றும் கிம் ஜொங் உன் (Kim Jong-un) தெரிவித்துள்ளார்.