சட்டவிரோதமான கட்டடமே அகற்றப்பட்டது என்று முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தளிக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா பதிலளித்துள்ளார்
சட்டபூர்வமற்ற கட்டடம் கட்டப்பட்டால் அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்டபின் அதனை அறிவிக்க வேண்டும் என்று எனக்கு பணிக்கப்பட்டது. இந்த விடயத்தை பராமரிப்பு பகுதியினருக்கு அனுப்பியிருந்தேன்.
எனவே சட்டவிரோத கட்டடத்தை வைத்துக்கொண்டிருக்க முடியாது. அது அகற்றப்பட வேண்டிய ஒன்றே. சிறிய அத்திவாரக்கல் வைப்பதென்றாலும் உரிய அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்.
சிலர் இங்கு வருகை தந்து தமக்கு அரசியல் இலாபம் தேடுகின்றனர். ஆர்வக்கோளாறில் வந்திருக்கி றார்கள். இவர்கள் கலைந்து செல்லாது விட்டால் கையாளும் விதத்தில் கையாளுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.