சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், (Lee Sian Loong) கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்
மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் பைசர் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
சுகாதாரப் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமையிலிருந்தும் முதியோருக்கு அடுத்த மாதத்திலிருந்தும் இன்னும் பரவலாக தடுப்பூசி போடப்படவுள்ளது.