சிறிலங்கா விமானப்படைக்கு சீனாவிடம் இருந்து இரண்டு விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
வை-12 ரகத்தைச் சேர்ந்த நடுத்தர வகை போக்குவரத்து விமானங்களையே கொள்வனவு செய்யவுள்ளதா சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து, பயிற்சி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக இந்த விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சிறிய ரகத்தைச் சேர்ந்த நான்கு உலங்குவானூர்திகளையும் சிறிலங்கா விமானப்படை கொள்வனவு செய்யவுள்ளது.
பயிற்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கான இந்த உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு ஏற்கனவே கேள்விப்பத்தரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரன தெரிவித்துள்ளார்.