வன்முறையை தூண்டும் வகையில், கருத்துகளை வெளியிட்டதால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் கீச்சக கணக்கை நிரந்தரமாக மூடுவதாக கீச்சக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை அடுத்து, தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய காணொளியை டிரம்ப் பதிவேற்றினார்.
வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி, அந்த காணொளியை கீச்சக நிறுவனம் உடனடியாக நீக்கியதுடன், தற்காலிகமாக கணக்கை முடக்கியது.
இந்த நிலையில், கீச்சக நிறுவனம் டிரம்ப்பின் கணக்கை தற்போது நிரந்தரமாக நீக்கியுள்ளது.
டிரம்ப்பின் கணக்கை தீவிரமாக ஆய்வு செய்ததில், மேலும் வன்முறையை தூண்டும் அபாயம் உள்ளதாகவும், இதனால், அவரது கணக்கு நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும், கீச்சக நிறுவனம் தெரிவித்துள்ளது.