அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி முடக்கப்படும் என முகநூல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) தெரிவித்துள்ளார்.
“ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக வன்முறை, கிளர்ச்சியை தூண்டுவதற்கு எங்கள் தளத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்த காலகட்டத்தில், ட்ரம்ப்பை தொடர்ந்து, எங்கள் சேவையை பயன்படுத்த அனுமதித்தால், அதனால் ஏற்படும் அபாயங்கள் மிகப்பெரியதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
இதனால், அவரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் காவலவரையின்றி முடக்குகிறோம்.
அல்லது, அதிகார மாற்றம் அமைதியாக நிறைவடையும் வரை குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது தடை தொடரும்.” என்றும் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது கூகுளின் காணொளி தளமான யூடியூப்பும், டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய காணொளிகள் சிலவற்றை நீக்கி உள்ளது.