முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்புக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
அவர் தனது கீச்சகத்தில் “ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டதற்கு எனது கடும் கண்டனங்கள்! பிரதமர் மோடி இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திட வேண்டும்! இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு!” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டீ.டீ.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம் என்றுபா.ஜ.க.வின் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர் வானதி சீனிவாசன் கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது கீச்சகப்பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், யாழ்.பல்கலைக்கழக வளாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி யை அழிப்பது வேதனையானது.
தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும் முயற்சிகளே தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது துரதிர்ஷ்டவசமானது. இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது சமீபத்தைய சிறிலங்கா விஜயத்தின் போது தமிழர்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார் எனவும் சுட்டிக்காட்டி உள்ளார்.





