முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் தூபியை இடித்தழித்தமை சிறிலங்கா அரசாங்கத்தின் இழிவான செயல் என்று லிபரல் கட்சியின் ஸ்கார்பரோ தெகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
தனது கீச்சகப்பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூருவதற்காக அமைக்கப்பட்ட தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் இந்த இழிவான செயலை மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா தீவில் உள்ள தமிழ் மக்களின் அடையாங்களை, வரலாற்றை, அழிப்பதன் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் தப்பித்தக்கொள்ளப்பார்க்கின்றது.
இந்த நிலைமை மாற்றப்பட்டு நீதி, நியாயம் நிலைநாட்டும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.