பெப்ரவரி மாத நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக, ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொரானா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஸ்புட்னிக் தடுப்பூசியைப் பெறுவது குறித்து ரஷ்யாவுடனும், ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனகா தடுப்பூசியை பெறுவது குறித்து இந்தியாவுடனும் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பைசர் தடுப்பூசியைப் பெறுவது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும், அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், தடுப்பு மருந்துகளை பெறுவதற்கு அரசாங்கம், நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.