அரச நிறுவனமொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் என்னால் இதனையே செய்ய முடியுமென யாழ்ப்பாண பல்கலைகழ துணைவேந்தர் தெரிவித்ததாக, மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் ஆகியோரை துணை வேந்தர் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அழைத்திருந்தார்.
அப்பேச்சு வார்த்தை தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.
பல்கலைகழகத்திற்குள் பாதுகாப்பு வழங்கப்பட்டது பாதுகாப்பு அமைச்சின் முடிவு. அந்த பாதுகாப்பு தொடரும் என்றும் துணைவேந்தல் குறிப்பிட்டதாக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து அவர்கள், தமது போராட்டம் தொடரும் என நாமும் கூறினோம்“ எனறும் தெரிவித்தனர்