மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்ட ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு (Zakiur Rehman Lakhvi) பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மும்பையில் 166 பேர் உயிரிழந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில், பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியான ஜகியுர் ரஹ்மான் லக்வியே, தாக்குதலுக்கு திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் சமர்ப்பித்த இந்தியா, லக்வியை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், லக்வியை கடந்த 2009-ம் ஆண்டு கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் லக்விக்கு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.