ரொரன்ரோவில் கடந்த ஆண்டு அசையாச் சொத்து விற்பனை அதியுச்சமாக இருந்துள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ரொரன்ரோவில் அச்சொத்துக்களின் சராசரி விலை 9இலட்சத்து 29 ஆயிரத்து 699 டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன் 95 ஆயிரத்து 151 சொத்துகள் கைமாறியுள்ளது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிக சொத்துகள் கைமாறியுள்ளன.
இதற்கு மறுதலையாக ரொரன்ரோ நகரில் அடுக்குமாடி மனைகளின் விலை 5 தசவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக ஆயிரத்து 68 சொகுசு வீடுகள் கைமாறியுள்ளதுடன் 2019உடன் ஒப்பிடும்போது 56 சதவீதம் அதிகரித்துள்ளது.