டில்லியில் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, இன்று நடத்தப்பட்ட 8ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை, திரும்ப பெற கோரி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த, விவசாய சங்கத்தினர், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இன்று 8 ஆவது கட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
இந்த பேச்சுக்களும், சுமுக தீர்வு எதுவும் எட்டப்படாமலேயே முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.