இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வரும் 16ம் நாள் முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான, ‘கோவிஷீல்ட்’ ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில், அவசரகாலத்தில் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தடுப்பூசிகளையும், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை, மத்திய சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், வரும் 16 ஆம் நாள் முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.