கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இலட்சக்கணக்கான கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள ஏராளமான பண்ணைகளில் கடந்த சில நாட்களில் 4 இலட்சம் கோழிகள் இறந்துள்ளன.
இந்தநிலையில், பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கோழிகளைக் கொல்ல அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்து பறவைக் காய்ச்சல் பரவி விடக் கூடாது என்பதற்காக, மகாராஷ்டிராவில் ‘சிவப்பு எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட மாவட்டங்களில் 10 நாட்களுக்கு கோழி இறைச்சி, முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னெச்சரிக்கையாக வனவிலங்குகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.
இதுவரை, கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், அரியானா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் இருப்பது சோதனைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.