உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பில் அதிகளவு சிரத்தையைக் கொண்டுள்ளதாக பொதுசுகாதார துறையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் தெரேசா டாம் (Theresa Tam) தெரிவித்துள்ளார்.
பிரித்தனியாவில் கண்டறியப்பட்ட உருமறிய கொரோனா வைரஸ் கனடாவில் அடையாளம் காணப்பட்டது. அதனை தொடர்ந்து சிலருக்கு தொற்றிருப்பது அடையாளம் கணப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது கனடாவின் நாடாளவிய ரீதியில் இந்த வைரஸின் தொற்றுக்கள் தொடர்பில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மிக உன்னிப்பான அவதானம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் உடல் இலட்சணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.