தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை வரும் 16-ஆம் நாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பித்து வைக்கவுள்ளார.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும், கோவேக்சின் தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வரும் 16ஆம் நாள் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதற்கமைய தமிழகத்தில், மதுரை மாவட்டத்தில் வரும் 16ஆம் நாள், தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி, ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
முதல்கட்டமாக மருத்துவர்கள், தாதிகள் , மருத்துவ ஊழியர்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் என 6 இலட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.