தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் 47 ஆவது நினைவு நாள் இன்றாகும்.
1974ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடந்து கொண்டிருந்த போது, ஒன்பது அப்பாவித் தமிழர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலையின், 47 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்று யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
யாழ். நகரில் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாலயத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமாகியது.
இதன்போது தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.