பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, செயற்பட்டது போல, பழைய நிலைக்குத் திரும்புவதற்கு தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கொழும்பில் விடுதலைப் புலிகள் என்னை இலக்கு வைத்து குண்டை வெடிக்க வைத்தனர்.
அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, செயற்பட்ட விதத்தில் தற்போதும் செயற்பட வேண்டும் என்றே, பௌத்த மத தலைவர்களும் மக்களும் என்னிடம் எதிர்பார்க்கின்றனர்.
பாதுகாப்புச் செயலாளராக இருந்த நந்தனசேன கோட்டாபய ராஜபக்க்ஷவின் குணாதிசயத்திற்கு ஏற்ப செயற்படுவதற்கு நான் தயார்.
ஆனாலும், எதிர்கட்சியினர் போல மோசமான அரசியலில் ஈடுபட நான் தயாரில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.