மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீபக் மராவி என்ற 42 வயதுடைய குறித்த தன்னார்வலர், கடந்த மாதம் 12-ஆம் நாள் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்றும், 10 நாட்களின் பின்னர், திடீரென அவரது உடல் நலம் மோசமாகி உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனையில், அவர் விஷத்தின் காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திய பின்னர் தன்னார்வலர் ஏழு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில், ஆரோக்கியமாகவும், எந்த பின்விளைவுகளும் ஏற்படாமல் இருந்தார் என்றும், 9 நாட்களுக்கு பின்னரே, அவர் இறந்துள்ளார் என்பதால், அவரது மரணம் தடுப்பூசி ஆய்வுடன் தொடர்புபடவில்லை என, கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.