வடமாகாணத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“யாழ். போதனா மருத்துவமனை மற்றும் யாழ். மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்று 658 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில், நல்லூரைச் சேர்ந்த ஒருவருக்கும், அல்வாயைச் சேர்ந்த ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் சத்தியமூர்த்தி மேலும் கூறியுள்ளார்.