யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பதற்கு, அதிகாலை வேளையில் துணைவேந்தர் அடிக்கல் நாட்ட முன்வந்தமை குறித்து, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று காலை, மாணவர்களைச் சந்தித்துப் பேசிய எம்.கே.சிவாஜிலிங்கம், “ இந்த நினைவுத்தூபியை நண்பகல் 12 மணிக்கு நாட்டியிருக்கலாம், எதற்காக துணைவேந்தர் அதிகாலையில் முன்வந்தார் என்பதில் சந்தேகம் உள்ளது.
இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தை பிசுபிசுக்க செய்யும் முயற்சியாகவே இதனைப் பார்க்கிறோம்.
நினைவுக்கல் நாட்டப்பட்ட செய்தி பரவியதால், வர்த்தகர்கள் பலர் கடைகளை திறக்க தொடங்கியுள்ளனர் என்றும், எனவே இதில் கபட நோக்கம் உள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.