அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு மருந்தகத்துக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து, துப்பாக்கிதாரி, பின்புறமாக தப்பியோடி, வீதியில் எதிர்ப்பட்டவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
பின்னர், பெண் ஒருவரை பயணமாக பிடித்து தப்பிக்க முயன்ற போது, காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், பயணமாக பிடிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.